நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வார்னர், ஃபின்ச், மார்னஸ் லபுஷேனின் பொறுப்பான அரைசதத்தால் 50 ஓவரில் 258 ரன்கள் அடித்தது.

259 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடாமல், நிதானமாகவும் பொறுமையாகவும் ஆடினார். ஆனால் மறுமுனையில் ஹென்ரி நிகோல்ஸ், வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் ஆட்டமிழக்க, கப்டிலும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் சொதப்பியதால் அந்த அணி வெறும் 187 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி, 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் வில்லியம்சன், ஆடம் ஸாம்பாவின் சுழலில் கிளீன் போல்டாகி 19 ரன்களில் வெளியேறினார். அவரது விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் நியூசிலாந்தின் நட்சத்திர வீரருமான வில்லியம்சனின் விக்கெட்டுக்கு பிறகு தான் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. தனது வழக்கமான பேட்டிங்கை விட்டுக்கொடுத்து, பொறுமையாக ஆடிய கப்டிலுடன் இணைந்து வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் போட்டி தலைகீழாக மாறியிருக்கும். 

Also Read - என்னோட தூக்கத்தை கெடுத்ததே பும்ரா தான்.. அவரை நினைத்து நள்ளிரவில்லாம் முழிச்சுருக்கேன் - ஆஸி., சீனியர் வீரர்

ஆனால் வில்லியம்சனை களத்தில் நிலைக்கவிடாமல், அருமையான கூக்ளியின் மூலம் அவரை வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஆடம் ஸாம்பா. கூக்ளியின் மூலம், வில்லியம்சனை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். அந்த வீடியோ இதோ..