யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்குமா? இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டி20 போட்டியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இதில், முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
தேசிய கொடியை பிடித்தவாறு ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஐடி ஊழியர்!
இதில், இந்திய அணியில் இடது கை வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இஷான் கிஷான் ஒரு நாள் தொடர்களில் சிறப்பாக விளையாடிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் இடம் பெறுவார். ஆனால், சுப்மன் கில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்?
அடுத்து சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.