Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்?
ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான அட்டவணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் – திலக் வர்மா நம்பிக்கை!
கடந்த சீசனில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால், இந்த சீசனில் எப்படியாவது ஆசிய கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்? யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஓபனிங் வீரர்களாக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். 3ஆவது ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 85 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
விராட் கோலி – சூர்யகுமார் யாதவ்:
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசைகள் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படலாம். கோலி இந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் விளாசினார். டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் போட்டிகளில் இன்னும் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை.
இந்திய அணிக்கு 5 சதவிகிதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதமும் அபராதம்!
விக்கெட் கீப்பர்: இஷான் கிஷான் – சஞ்சு சாம்சன்:
ரிஷப் பண்ட் இன்னும் தனது முழு உடல் தகுதி பெறாத நிலையில், இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா
இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரும் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜடேஜா 6 ஆட்டங்களில் 113 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகளையும், படேல் 64 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளையும் சம அளவில் எடுத்துள்ளார்.
அதிரடி ஆட்டம் காட்டிய ரியான் பராக்; தியோதர் டிராபியை கைப்பற்றிய தெற்கு மண்டலம்!
ஸ்பின்னர்கள்: யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ்
சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆசியக் கோப்பை 2023 இன் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முந்தைய டி20 ஆட்டத்தில் சஹால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குல்தீப் யாதவ் இந்த ஆண்டில் 11 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணியில் தோனி எப்படி இடம் பெற்றார்? தெரியாத விஷயத்தை பகிர்ந்த சபா கரீம்!
வேகப்பந்து வீச்சாளர்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்!
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மூலமாக இந்திய அணிக்கு திரும்பிய ஜஸ்ப்ரித் பும்ரா, ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பும்ரா தவிர, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய 4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.