லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?
லக்னோவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடிக்கும்.
லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது ஐபிஎல் போட்டி நடக்கிறது. இதில், 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. லக்னோ 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 போட்டிகளுமே கடந்த சீசனில் நடந்ததுதான். இதில், 2 முறையும் கேஎல் ராகுல் 2 சதம் அடித்திருக்கிறார்.
முகமது சிராஜ்ஜின் புதிய வீடு திறப்பு விழாவிற்கு விசிட் அடித்த விராட் கோலி அண்ட் டீம்!ஏகானா மைதானத்தில் இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. மற்ற 3 போட்டிகளில் எதிரணி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக லக்னோ 193 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்மாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த கில்; நேற்றைய போட்டியின் சாதனைகள் லிஸ்ட் இதோ
புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 2ஆவது இடம் பிடிக்கும். தற்போது 2ஆவது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்படும். இதன் மூலமாக மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு போட்டியில் விளையாட உள்ள சிஎஸ்கே அந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!