Asianet News TamilAsianet News Tamil

WI vs IND 3rd T20: பதிலடி கொடுக்குமா இந்தியா? ஒரு தொடரை கூட கைப்பற்றாத வெ.இ, வரலாற்றை மாற்றுமா?

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டி இன்று நடக்கும் நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

WI vs IND Clash in 3rd T20 match today at Guyana
Author
First Published Aug 8, 2023, 11:41 AM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் முதலில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்தியா. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பா?

இதைத் தொடர்ந்து இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது டி20 போட்டி நடக்கிறது. கயானாவில் நடக்கும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு எதிராக எந்த தொடரையும் கைப்பற்றவில்லை.

Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

இந்த நிலையில், வரலாற்றை மாற்றும் வாய்ப்பு தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்துள்ளது. அதனை வெஸ்ட் இண்டீஸ் சரியாக பயன்படுத்தி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

அதில், இஷான் கிஷான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆதலால், இந்திய அணி ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது. ஆதலால், இன்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

கடந்த போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாத குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சிற்கு சாதகமான மைதானம் என்பதால், முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. கடந்த போட்டியில் அக்‌ஷர் படேலுக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை. மாறாக ஹர்திக் பாண்டியா தான் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் மட்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios