Asianet News TamilAsianet News Tamil

TNPL 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு யார் கேப்டன்? இதுவரையில் அறிவிக்கப்படவில்லை!

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இதுவரையில் யார் கேப்டன் என்று அறிவிக்கப்படவே இல்லை.

Who is the captain of Chepauk Super Gillies?
Author
First Published Jun 9, 2023, 3:26 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2016 ஆம் ஆண்டும் முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த தொடரின் 7ஆவது சீசன் வரும் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை பிரதர்ஸ், சீசேம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.

அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!

இந்த தொடர் கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய பகுதிகளில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த சீசனின் தொடருக்கான அட்டவணை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விலை ரூ.200 முதல் ரூ.1500 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் வீதம் மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என்று 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சீசன் முதல், ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று இம்பேக்ட் பிளேயர் விதியும் பின்பற்றப்படவுள்ளது. டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் மழையால் பாதிகப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லக் கூடிய அடுத்த நாள் அல்லது மாற்று தேதியில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டன் யார் என்று அறிவிக்கப்படவில்லை.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

யு சைதேவ், நாராயண் ஜெகதீசன், சஞ்சய் யாதவ், பாபா அபரஜித், பிரதோஷ் ரஞ்சன் ஃபால், ஹரிஷ் குமார் எஸ், சதீஷ் ஆர், ராஹில் ஷா, ரோகித் ஆர், சிலம்பரசன் எம், சிபி ஆர் , மதன் குமார் எஸ், சந்தோஷ் சிவ் எஸ், விஜய் அருள் எம், லோகேஷ் ராஜ் டிடி, ராக்கி பி, அய்யப்பன்

பயிற்சியாளர்: ஹேமங்க் பதானி

உரிமையாளர்: மெட்ரோனேஷன் சென்னை டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் - தினத்தந்தி

தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!

 

Follow Us:
Download App:
  • android
  • ios