நாளை தான் கடைசி – சென்னை அணியில் விடுவிக்கப்படும் வீரர்கள் யார்? எத்தனை வீரர்களை சிஎஸ்கே ஏலம் எடுக்கும்?

ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு நாளை தான் கடைசி நாளாகும்.

Who are the players will be released from the Chennai Super Kings? rsk

ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஜூ மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், ஐபிஎல் டிரேட் முறையில் வீரர்களை ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நாளை மாலை 4 மணி வரையில் தான் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் குறி வைக்கப்பட்ட வீரர்கள் யார் யார்? ரச்சின் ரவீந்திரா, கம்மின்ஸ், டிராவிட் ஹெட்..!

ராஜஸ்தான ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் டிரேட் முறை நடந்துள்ளது. அதன்படி, ஆவேன் கான் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கும், தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.15 கோடிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது என்ன எக்ஸேஞ்ச் ஆஃபரா? ஹர்திக் பாண்டியாவை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!

இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ், மேலும் மூன்று வீரர்களை விடுவிக்க தயாராகி வருகிறது, இதனால் அவர்கள் ரூ.30 கோடிக்கு ஏலத்தில் நுழைய முடியும். பென் ஸ்டோக்ஸ் (ரூ. 16.25) தவிர, அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளார், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு (ரூ. 6.75) இடமும் காலியாக உள்ளது. பென் ஸ்டோக்ஸை விடுவிப்பதோடு, டுவைன் பிர்ட்டோரியஸ், சிசாண்டா மகாலா, கைல் ஜேமிசன் ஆகியோரையும் சிஎஸ்கே நிர்வாகம் விடுவிடுக்க தயாராக உள்ளது.

Cricket World Cup 2027: இவர்களுக்கு எல்லாம் வயசாயிடுச்சு – 2027 உலகக் கோப்பைக்குள் ரிட்டயர்டா?

மேலும், ஹாரி ப்ரூக் , சாம் கரண், டிம் சவுதி, லாக்கி ஃபெகுசன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் விடுவிடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை மீது கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது எஃப்ஐஆர் – கிரிக்கெட் விளையாட தடை?

ஏலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும். உலகக் கோப்பையில் சிறந்த வீரர்களான பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் ஜெனரல் ஏலத்தில் 50 வீரர்கள் வரை வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11ஆம் தேதி முடிவடையும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு மார்ச் மாதத்தின் 2 அல்லது 3ஆவது வாரத்தில் ஐபிஎல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், WPL ஏலம் டிசம்பர் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் ரூ.13.5 கோடி சம்பளமாக இருக்கும், மேலும் பிப்ரவரியில் லீக் நடத்தப்படும் என்று தெரிகிறது. இடங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios