ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் குறி வைக்கப்பட்ட வீரர்கள் யார் யார்? ரச்சின் ரவீந்திரா, கம்மின்ஸ், டிராவிட் ஹெட்..!
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் உலகக் கோப்பையில் ஜொலித்த டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஒவ்வொரு அணியும் குறி வைத்து வருகிறது.
IPL Mini Auction 2024
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அனைவரது கவனம் முழுவதும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் வீரர்களின் பட்டியலை வெளியிட நாளை 26 ஆம் தேதி தான் கடைசி நாள். மேலும், அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ள டிரேட் முறைக்கு நாளை மாலை 4 மணி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
IPL Auction 2024
ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக டிரேட் முறையில் சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டுள்ளன. 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை ஏற்கனவே தங்கள் நகர்வுகளை தொடங்கியுள்ளன.
IPL 2024 Auction
கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன் வென்று கொடுத்தவருமான கவுதம் காம்பீர் லக்னோ அணியிலிருந்து மீண்டும் கேகேஆர் அணிக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான தேவ்தத் படிக்கல், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு டிரேட் முறையில் வந்துள்ளார்.
IPL 2024
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடி கொடுத்து திரும்ப பெற்றுள்ளது. ஆனால், மும்ப இந்தியன்ஸ் அணியிலிருந்து ஒரு வீரரை கூட குஜராத் டைட்டன்ஸ் அணி திரும்ப பெறவில்லை.
Chennai Super Kings
இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் 17ஆவது சீசனில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் உள்ளூர் மற்றும் உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்களை ஏலத்தில் எடுக்க இருக்கிறது. அதில், எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை குறி வைத்துள்ளது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கெரால்டு கோட்ஸி:
நடந்து முடிந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் கெரால்டு கோட்ஸி சிறப்பாக பந்து வீசி அனைவரையும் கவர்ந்தார். ஆதலால், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டக் கூடும். ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கேக்கு உண்மையான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் இல்லை, மேலும் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு கோட்ஸி சரியான தேர்வாக இருக்க முடியும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரச்சின் ரவீந்திரா:
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்று தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கால் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ரச்சின் ரவீந்திரா. இந்த தொடரில் 3 சதங்கள் உள்பட 578 ரன்கள் குவித்தார். ஆதலால், ஆர்சிபி அணிக்கு ரச்சின் ரவீந்திரா தான் சிறப்பான தேர்வாக இருக்க முடியும்.
மும்பை இந்தியன்ஸ் – மிட்செல் ஸ்டார்க்
இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில், ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்வம் காட்டி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பேட் கம்மின்ஸ்
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்து பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 6ஆவது முறையாக சாம்பியனானது. பந்துவீச்சு மற்றும் ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கில் சிறந்து விளங்கி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் – ரச்சின் ரவீந்திரா
பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர ஷிகர் தவான் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடர்களில் திணறி வரும் நிலையில், அவருக்குப் பதிலாக சிறந்த ஆல் ரவுண்டரான நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவை அணியில் இடம் பெற செய்ய அதிக தொகை கூட செலவு செய்ய பஞ்சாப் கிங்ஸ் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பிருத்வி ஷா
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பிருத்வி ஷாவை ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் – ஸ்டீவ் ஸ்மித்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி தூக்கிய நிலையில், அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தை அணியின் கேப்டனாக்க குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருகிறது.
தேவ்தத் படிக்கல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக லக்னோ அணியிலிருந்து ஆவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.