உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடுகின்றன.

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுமே இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை. அதனால் இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையுமே ஏற்படுத்தாது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கீமார் ரோச்சை இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நீக்கிவிட்டது. கேப்ரியல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், திரிமன்னே, தனஞ்செயா டி சில்வா, உதானா, வாண்டெர்சே, ரஜிதா, லசித் மலிங்கா. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், அம்ப்ரிஸ், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), பூரான், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), பிராத்வெயிட், ஃபேபியன் ஆலன், கோட்ரெல், ஒஷேன் தாமஸ், கேப்ரியல்.