இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் டி20 போட்டியில் ஆடுகின்றனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அவருடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறங்குகிறார். தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடுகிறார். அதனால் ஹர்திக் பாண்டியா 5ம் வரிசையில் ஆடுவதால், ரிஷப் பண்ட் ஓபனிங்கில் இறங்குகிறார். 

3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் 6ம் வரிசையில் தினேஷ் கார்த்திக் ஆடுகின்றனர். 3 ஸ்பின்னர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஸ்பின்னர்களான அஷ்வின் - ஜடேஜாவுடன் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் எடுக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் ஆடுகின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 3வது ஃபாஸ்ட் பவுலர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மயர் ஓபனிங்கில் ஆடுகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய், கீமோ பால்.