டி20 உலக கோப்பை: சிக்கந்தர் ராசா அபார பவுலிங்.. பேட்டிங்கில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தகுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடித்து, 154 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

west indies set 154 runs target to zimbabwe in t20 world cup match

டி20 உலக கோப்பையில் இன்று க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. ஹோபர்ட்டில் இன்று நடந்த முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் ஜிம்பாப்வேவும் ஆடிவருகின்றன. ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - 2023 ஆசிய கோப்பை: இந்திய அணி பாகிஸ்தானுக்கு போகாது.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்ட அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், ஒடீன் ஸ்மித், ஒபெட் மெக்காய்.

ஜிம்பாப்வே அணி:

சகாப்வா (கேப்டன், விக்கெட் கீப்பர்), வெஸ்லி மதீவெரெ, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட், பிளெஸ்ஸிங் முஸாராபானி.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எவின் லூயிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பூரன் வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்ட, சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 36 பந்தில் 45 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஷமர் ப்ரூக்ஸ் (0), ஜேசன் ஹோல்டர்(4) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ரோவ்மன் பவல் 21 பந்தில் 28 ரன்களும்,  அகீல் ஹுசைன் 18 பந்தில் 23 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையும் படிங்க - இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி ரத்து..! 2 போட்டிகளை கெடுத்துவிட்ட மழை

ஜிம்பாப்வே அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சிக்கந்தர் ராசா,4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 154 ரன்கள் என்ற இலக்கை ஜிம்பாப்வே அணி விரட்டிவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios