அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த ரோவ்மன் பவல்; வெஸ்ட் இண்டீஸ் 159 ரன்கள் குவிப்பு!
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது டி20 போட்டி கயானவில் உள்ள புரோவிடான்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கைல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். மேயர்ஸ் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகள் உள்பட 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
31ஆவது உலக பல்கலைக்கழக போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!
ஜான்சன் சார்லஸ் 12 ரன்களில் வெளியேறினார். நிக்கோலஸ் பூரன் 20 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து பொறுமையாக விளையாடிய பிராண்டன் கிங் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பவல் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 40 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
WI vs IND 3rd T20: இஷான் கிஷானை நீக்கிய இந்தியா: டி20 போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!