தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டத்தை மாற்றியமைக்க அரசை வலியுறுத்துவோம்: WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர்.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 2ஆவது குவாலிஃபையர்: மும்பை, குஜராத் பலப்பரீட்சை!
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பத்திரனாவை என்ன மாதிரி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா, அவர் இந்திய அணியில் விளையாடுவாரா?
மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர்.
பத்திரனா பற்றி தோனி என்ன சொன்னார்? பெருமிதமாக பகிர்ந்த பத்திரனா சகோதரி!
டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
இதில் ஒன்று தான், பிரிஜ் பூஷன் சிங்க் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிஜ் பூஷன் சிங், வரும் ஜூன் 5ஆம் தேதி அயோத்தியா பேரணியில் 11 லட்சம் பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) கலந்து கொள்வார்கள். அப்போது தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டத்தை மாற்றியமைக்க அரசை வலியுறுத்துவோம்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!
மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் கூட அதன் தவறான பயன்பாட்டிலிருந்து விடுபடவில்லை என்று கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க காங்கிரசால் ஜோடிக்கப்பட்ட வழக்கு. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. போக்சோ சட்டம் அதன் பல்வேறு அம்சங்களை ஆராயாமல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.