ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்த கேப்டன் இவர்தான்..! சர்ப்ரைஸ் தேர்வு
தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்கலாம் என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ளன. இந்த 15 சீசனில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது சிஎஸ்கே. சிஎஸ்கே அணி ஒரு சீசனை தவிர, மற்ற ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.
ஐபிஎல்லில் ஃபைனல் வரை செல்வதையும், கோப்பையை வெல்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்துள்ள அணி சிஎஸ்கே. அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம்.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்
எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது. தான் இருக்கும்போதே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்துவிட வேண்டும் என நினைத்த தோனி, கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. மேலும் ஜடேஜா ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலும் இருந்தது. தோனியின் தலையீடுகள் அதிகம் இருந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா.
அதன்பின்னர் சிஎஸ்கே அணியுடனான மோதல் போக்கையும் மீறி, ஜடேஜா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட இனிமேல் வாய்ப்பில்லை. இதற்கிடையே, அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.
தோனியை போன்ற மிகவும் கூலான, நிதானமான, தெளிவான கேப்டனான கேன் வில்லியம்சன், சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்த சரியான கேப்டன்சி ஆப்சனாக இருப்பார். எனவே அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கலாம்.
NZ vs IND: முதல் டி20 போட்டிக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான உத்தேச இந்திய அணி
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர், தோனிக்கு அடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கலாம். மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர் ருதுராஜ். எனவே அவரை கேப்டனாக நியமிக்கலாம். தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் டெவான் கான்வே தான் என்றார் வாசிம் ஜாஃபர்.