NZ vs IND: முதல் டி20 போட்டிக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான உத்தேச இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி டி20 தொடரில் ஆடுகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 2023: ஐபிஎல் அணிகள் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்
ரோஹித், கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்கள் இல்லாததால் இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கும். ஷுப்மன் கில் - இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் சஞ்சு சாம்சன், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
ஸ்பின் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும், மற்றொரு ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலும் ஆடுவார்கள். டி20 உலக கோப்பையில் சாஹலுக்கு ஆட வாய்ப்பளிக்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், அவருக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கும்.
ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் இளம் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்
உத்தேச இந்திய அணி:
ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.