உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது – வாசீம் அக்ரம்!
உலகக் கோப்பையில் வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தானுக்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் கூறியுள்ளார்.
இந்தியா நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ மற்றும் ஐசிசி இன்று வெளியிட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியா தனது 3ஆவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!
உலகக் கோப்பை தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கணிப்பை தொடங்கியுள்ளனர். இதில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் ஒரு படி மேல் சென்று பாகிஸ்தானுக்கு தான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முதன் முதலாக உலகக் கோப்பையை வென்றது. இங்கிலாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனானது. அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு மட்டுமே இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரரான பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அதுமட்டுமின்றி அவரது தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் முக்கியமான வீரர்களாக கருதப்படுகின்றனர்.
சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பாபர் அசாம் தலைமையிலான பாக். அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
அவர்கள் உடல் தகுதியுடன் இருக்கும் வரையில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றது. எனினும், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 50 ஓவர் போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து ஒரு நாள் போட்டி அணிகளின் பட்டிகளின் தரவரிசை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
எங்களிடம் உள்ள சிறந்த வீரர் என்பதால், அவரால் முடியும் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரை பின்தொடர்கின்றனர். அவர் செய்யும் ஒவ்வொன்றின் மூலமாகவும் ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்துச் செல்கிறார். அது டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டி என்று எதுவாக இருந்தாலும் ரசிகர்களை வியக்க வைப்பதில் வித்தகராக உள்ளார்.