சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று வெளியான நிலையில், சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை இன்று வெளியானது. அதன்படி, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் இந்தியாவிலுள்ள முக்கியமான மைதானங்களில் தலா 5 போட்டிகள் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருந்த போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுடுத்தியுள்ளது.
முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், சென்னை தான் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதி, தங்கள் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தாவில் விளையாட ஐசிசிஐயிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருந்தது.
அக்டோபர் 15 என்ன ஸ்பெஷல்? இந்தியா – பாகிஸ்தான் போட்டி அப்போது நடத்தப்பட காரணம்?
ஆனால், உலகளவில் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த ஜெய்ஷா விரும்பினார். எனினும், இதற்கு பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. அதோடு, பாகிஸ்தானுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. ஆகையால் சென்னை, பெங்களூருவில் பாகிஸ்தான் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு ஜெய்ஷா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த சம்மதம் தெரிவித்தது.
உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது? முதல் போட்டி யாருடன்?
இதன் காரணமாக சென்னையில் நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதுவும், தமிழகத்தில் நடந்தால் இன்னும் கொண்டாட்டம் தான். ஆனால், இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடந்தது. இறுதிப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடந்தது. மேலும், இப்போது உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்கிறது. கடைசி போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்கிறது என்று டுவிட்டரில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.