பாகிஸ்தான் அணியில் ஷோயப் அக்தர் 1997ம் ஆண்டு அறிமுகமானபோது, அணியின் சீனியர் வீரராக திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். வாசிம் அக்ரம் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர். ஷோயப் அக்தர் அறிமுகமான பிறகு, அக்ரமுடன் இணைந்து நிறைய போட்டிகளில் ஆடியுள்ளார் அக்தர். 

அக்ரமும் அக்தரும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை, தங்களது வேகத்தின் மூலம் தெறிக்கவிட்டுள்ளனர். இந்நிலையில், இருவரும் டுவிட்டரில் கலகலத்துள்ளனர். 

பாகிஸ்தானுக்கு ஆடியதில் மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயமே, பாகிஸ்தான் அணியின் யூனிஃபார்மை அணிவதுதான். அப்படி நான் அணிந்து ஆடியதிலேயே இந்த ஜெர்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது. பாகிஸ்தானின் நிறம், மொழி, கொடியை மிக துல்லியமாக எடுத்துக்காட்டிய ஜெர்சி இதுதான் என்று வாசிம் அக்ரம் டுவீட் செய்திருந்தார். வாசிம் அக்ரம் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் அவருடன் அக்தரும் இருந்தார். 

அந்த புகைப்படத்தை கண்ட அக்தர், நீங்கள் என்னை ஏதோ திட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்னிடம் என்ன சொன்னீர்கள் என்று இப்போது உங்களால் சொல்ல முடியுமா? என்று அக்ரமிடம் அக்தர் கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அக்ரம், பந்தை நேராக வீச சொன்னதாக கூறினார். அக்தர் அகலப்பந்துகளாக வீசியிருப்பார் போல.. அதனால் நேராக வீச சொல்லியிருக்கிறார். 

அக்ரமின் ரிப்ளைவிற்கு பதிலளித்த அக்தர், நீங்கள் கண்டெடுத்த பவுலர்களில் நான் தான் மிக துல்லியமான பவுலர் என நினைக்கிறேன்.. என கிண்டலாகவும் ஜாலியாகவும் ரிப்ளை செய்தார்.

Also Read - பாபர் அசாமை விட சிறந்த பேட்ஸ்மேன்! பாகிஸ்தானின் “ரைசிங் ஸ்டார்” என் ஊருகாரன் வேற லெவல்லதான் இருப்பான் - அக்தர்