பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பாபர் அசாம் ஜொலிக்கிறார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட்டுக்கு அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக பாபர் அசாம் பார்க்கப்படுகிறார். 

பாகிஸ்தானின் விராட் கோலியாக பார்க்கப்படும் பாபர் அசாம், டிரைவ் ஷாட்டுகளை அருமையாக ஆடக்கூடிய டெக்னிக்கலாக வலுவான பேட்ஸ்மேன். 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களை குவித்துள்ளார். 

பாபர் அசாமை பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக புகழ்ந்து தள்ளுகின்றனர். ஷோயப் அக்தரும் பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகர். பாபர் அசாமை வெகுவாக புகழ்பவர்களில் முக்கியமானவர் அக்தர். 

ஆனால் தற்போது, பாபர் அசாமை விட சிறந்த வீரராக ஹைதர் அலி திகழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக ஹைதர் அலியை அக்தர் புகழ்ந்துள்ளார். நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸால்மி அணியில் அருமையாக ஆடி ரன்களை குவித்துவரும் 19 வயது இளம் வீரரான ஹைதர் அலியை பாகிஸ்தானின் ரைசிங் ஸ்டார் என்றும் புகழ்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அக்தர், ஹைதர் அலி பாபர் அசாமை விட சிறந்த வீரராக உருவெடுப்பார். ஹைதர் அலி ராவல்பிண்டிக்காரர். ராவல்பிண்டியில் இருந்து வருபவர்கள் சாதாரண லெவலில் இருக்கமாட்டார்கள். அபாரமானவர்களாகத்தான் திகழ்வார்கள். எதிர்காலத்தில் பாபர் அசாமைவிட சிறந்த வீரராக ஹைதர் அலி திகழ்வா என்று நம்புகிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அக்தர் கூறியுள்ளார். 

Also Read - அப்படியே ஐபிஎல்லை நடத்தினாலும், இப்படித்தான் நடத்தப்படும்.. கங்குலி அதிரடி

அக்தரும் ராவல்பிண்டிக்காரர் தான். இந்நிலையில், தனது ஊரிலிருந்து வந்துள்ள ஹைதர் அலியை வெகுவாக புகழ்ந்துள்ளார். தனது ஊரிலிருந்து வருபவர்கள் அனைவருமே அபாரமானவர்கள் என்று கூறி, சைடு கேப்பில் தனது பெருமையையும் மறைமுகமாக பறைசாற்றியுள்ளார்.