சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவராக கெத்தாக வலம்வருகிறார் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, சிறந்த பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருப்பவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர் கோலி. அதிலும் குறிப்பாக ஆஃப் திசையில் அவர் அடிக்கும் ஷாட்டுகள் அபாரமானவை. அதில் அவர் எக்ஸ்பெர்ட். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் சதமடித்த கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 43 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், விராட் கோலி அடித்த ஷாட்டை கண்டு வியந்து, அவரை புகழ்ந்தார் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். 

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வீசிய 22வது ஓவரின் ஐந்தாவது பந்தில்தான் அந்த ஷாட்டை அடித்தார் கோலி. ஸ்டம்புக்கு நேராக ஹோல்டர் வீசிய அந்த பந்தை உடம்பை வளைத்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தார் கோலி. அப்போது கமெண்ட்ரி செய்துகொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸ், கோலியின் உடல்மொழியை(பாடி லேங்குவேஜ்) பாருங்கள். ஓ மேன்.. நான் ஆடிய காலத்தில் இப்படியான ஷாட்டுகளை ஆடியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார். 

விராட் கோலி ஆடிய அந்த ஷாட்டின் வீடியோ இதோ... 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🧐⤴️.... Repost: @official_bcci #viratkohli #indvswi #coverdrive #lofted #flexibility #100% #odi #series #clinch

A post shared by Cricket Club (@cricket_club45) on Aug 15, 2019 at 8:51am PDT