Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 அந்த டீம் ஆடுறத பார்க்க செம போரிங்கா இருக்கு..! செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப செய்யுறானுங்க - சேவாக்

கேகேஆர் அணி ஆடும் போட்டி செம போரிங்காக இருப்பதாக முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

virender sehwag slams kkr repeating same mistakes and kkr matches are very boring in ipl 2021
Author
Chennai, First Published Apr 30, 2021, 4:10 PM IST

ஐபிஎல் 13வது சீசனே சரியாக அமையாத கேகேஆர் அணிக்கு, நடப்பு சீசனான 14வது சீசனும் படுமோசமாக அமைந்துள்ளது. ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் இரண்டே வெற்றிகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

லீக் சுற்று பாதி முடிந்துவிட்ட நிலையில், கேகேஆர் அணி பரிதாப நிலையில் உள்ளது. இந்த சீசனில் அந்த அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசமாக அமைந்துள்ளது. மோர்கன், ரசல், சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக், ராணா, திரிபாதி, கம்மின்ஸ் என பல சிறந்த வீரர்கள் கேகேஆர் அணியில் இருந்தாலும், ஒரு அணியாக அந்த அணி ஆடுவதாக தெரியவில்லை.

முதல் போட்டியிலிருந்தே மந்தமான தொடக்கம், சொதப்பலான மிடில் ஆர்டர் பேட்டிங், பவுலிங்கில் நிலைத்தன்மை இல்லாதது என செய்த தவறுகளையே திரும்ப திரும்ப அந்த அணி செய்துவருகிறது. செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளை சரிசெய்துகொள்ளவேயில்லை.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியிலும் தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணாவும் கில்லும் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுக்கவில்லை. கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறி 38 பந்தில் 43 ரன்கள் அடித்து கில் ஆட்டமிழந்தார். மோர்கன், நரைன் ஆகியோர் டக் அவுட். ரசல் 45 ரன்கள் அடித்தார். அந்த அணியின் பேட்டிங் படுமோசமாக சொதப்பிவருகிறது. ஏதாவது ஒரு போட்டியில் சொதப்பினால் பரவாயில்லை. அனைத்து போட்டிகளிலுமே கேகேஆர் அணி சொதப்புவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

டெல்லிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கும் படுமோசம். தொடக்க ஜோடியான பிரித்வி ஷா - தவான் ஜோடியை பிரிப்பதற்குள்ளாகவே போட்டி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தவும் முடியாமல், ரன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது கேகேஆர் அணி. அதனால் டெல்லி கேபிடள்ஸ் அணி 155 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றுவிட்டது.

இந்நிலையில், கேகேஆர் அணியின் ஆட்டத்தை பார்த்து விரக்தியடைந்த வீரேந்திர சேவாக், கேகேஆர் அணி ஆடுவதை பார்க்க, செம போரிங்காக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், கேகேஆர் ஆடுவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. சினிமா பார்க்கும்போது போரிங்காக இருக்கும் சீன்களை ஃபார்வர்ட் செய்துவிடுவேன். கேகேஆர் இந்த சீசனில் ஆடும் போட்டிகளை பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது. கேகேஆர் அணி ஆடும் போட்டிகள் செம போரிங்காக இருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல; நம் அனைவரையுமே சோர்வடைய செய்கிறது கேகேஆர் அணி. திரும்ப திரும்ப செய்த தவறுகளையே செய்கின்றனர்.

அணி நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அணி வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் தொடர்ந்து சொதப்பும்போது, நல்ல முடிவுகளை பெறும் வகையில் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்களை செய்வதில் தவறில்லை. மோர்கன், நரைனுக்கு முன் ஆண்ட்ரே ரசலை களமிறக்கலாம் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios