Asianet News TamilAsianet News Tamil

என் கெரியரில் சந்தோஷமான தருணம் இதுதான்! தன் கேப்டன் தோனியை நினைவுகூர்ந்த விராட் கோலி

தோனி கேப்டனாக இருந்தபோது, தான் துணை கேப்டனாக இருந்த காலக்கட்டம் தான் தனது கெரியரின் மகிழ்ச்சிகரமான காலக்கட்டம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

virat kohli tweet of heartwarming tribute to ms dhoni goes viral
Author
First Published Aug 26, 2022, 3:12 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 (நாளை) முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தான் இந்திய அணிக்கு பெரும் கவலையாக உள்ளது. அதனால் கோலியும் அவரது ஃபார்மும் தான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: ஷாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து மற்றொரு ஃபாஸ்ட் பவுலர் காயம்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி

கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் சுமார் 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலிக்கு இந்த 3 ஆண்டுகள் அவரது  கெரியரில் மோசமான காலக்கட்டமாகவும், அவர் மறக்கவேண்டிய காலக்கட்டமுமாகவே அமைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கோலி கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில், தனது கெரியரில் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கும் விராட் கோலி, தனது கெரியரின் மகிழ்ச்சியான தருணம் எதுவென்று ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன் டுவீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி, தோனியின் நம்பிக்கைக்கு உகந்த துணை கேப்டனாக இருந்த காலக்கட்டம் தான் என் கெரியரில் மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் இருவருக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப்புகள் எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானவை என்று பதிவிட்டுள்ள கோலி, இருவரின் ஜெர்சி எண்ணையும் சேர்த்து பதிவிட்டு ஹார்ட்டினை பறக்கவிட்டுள்ளார். 

தோனியுடனான மகிழ்ச்சியான தருணம் குறித்து கோலி பதிவிட்டுள்ள டுவீட் செம வைரலாகிவருகிறது. 2014ல் தோனிக்கு பின் இந்திய  டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற கோலி, 2017ல் அனைத்துவிதமான அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார்.அதற்கு முன் கேப்டன் தோனியின் துணை கேப்டனாக நீண்டகாலம் இருந்தார் கோலி. இந்நிலையில், அந்த காலக்கட்டம்தான் தன் கெரியரின் பொற்காலம் என்று கோலி கூறியிருக்கிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios