ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பையில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ம் தேதி துபாயில் நடக்கிறது.
ஆசிய கோப்பை தொடங்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பையில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
இதையும் படிங்க - Asia Cup:இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலா கண்டிப்பா அவரைத்தான் எடுத்திருக்கணும்! லக்ஷ்மிபதி பாலாஜி விளாசல்
1. சனத் ஜெயசூரியா
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இலங்கை முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா. ஆசிய கோப்பை தொடரில் 25 போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 3 அரைசதங்களுடன் 1220 ரன்களை குவித்துள்ளார். ஆசிய கோப்பையில் ஜெயசூரியாவின் அதிகபட்ச ஸ்கோர் 130 ரன்கள் ஆகும்.
2. குமார் சங்கக்கரா
ஆசிய கோப்பை தொடரில் 24 போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 8 அரைசதங்களுடன் 1075 ரன்களை குவித்துள்ள குமார் சங்கக்கரா 2ம் இடத்தில் உள்ளார்.
3. சச்சின் டெண்டுல்கர்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். 23 ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடி 2சதங்கள் மற்றும் 7 அரைசதங்களுடன் 971 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.
இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்
4. ஷோயப் மாலிக்
பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் ஆசிய கோப்பையில் 3 சதங்கள், 4 அரைசதங்களுடன் 907 ரன்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 143 ரன்கள் ஆகும்.
5. ரோஹித் சர்மா
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் இருப்பது, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா. ஆசிய கோப்பையில் 27 போட்டிகளில் ஆடி 883 ரன்களை குவித்துள்ளார் ரோஹித். ஆசிய கோப்பையில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள ரோஹித் சர்மா 7 அரைசதங்கள் அடித்துள்ளார்.