வீடியோ காலில் மனைவி, மகனுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி – வீடியோ வைரல்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலி மனைவி மற்றும் மகன், மகளுடன் வீடியோ காலில் கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Virat Kohli Spoke with anushka sharma on Video call after RCB Beat PBKS by 4 Wickets Difference in 6th Match of IPL 2024 rsk

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 6அவது போட்டி பெங்களூரு எம் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்துக் கொடுக்க பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி அணியில் பாப் டூப் ளெசிஸ் 3, கேமரூன் க்ரீன்3, கிளென் மேக்ஸ்வெல் 3, ரஜத் படிதார் 18, அனுஜ் ராவத் 11 ரன்கள் என்று வரிசையாக நடையை கட்டினர்.

Virat Kohli Orange Cap: முதல் முறையாக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற கோலி!

இந்தப் போட்டியில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சரித்திரம் படைத்தார். உள்ளூர் போட்டி, சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் என்று மொத்தமாக டி20 வரலாற்றில் 100 அரைசதங்கள் அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 100 முறை அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் (109) மற்றும் கிறிஸ் கெயில் (110) ஆகியோர் அதிக அரைசதங்கள் அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

ஹோலி டிரீட் கொடுத்த கோலி, சிறந்த பினிஷரான தினேஷ் கார்த்திக் – பெங்களூருவில் கோட்டை கட்டிய ஆர்சிபி!

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். கடைசியாக வந்த தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு விட்டு விளாசி ஆர்சிபிக்கு எளிதாக வெற்றி தேடிக் கொடுத்தார். இந்தப் போட்டியின் மூலமாக விளையாடிய 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி ஆரஞ்சு கேப் பெற்றார். அதன் பிறகு தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வீடியோ காலில் பேசி கொஞ்சி விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Virat Kohli 100 Half Centuries:டி20 கிரிக்கெட்டில் 100 முறை 50 அடித்து சரித்திரம் படைத்த சரித்திர நாயகன் கோலி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios