ஹோலி டிரீட் கொடுத்த கோலி, சிறந்த பினிஷரான தினேஷ் கார்த்திக் – பெங்களூருவில் கோட்டை கட்டிய ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 6ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு எம் சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 6அவது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பிராப்சிம்ரன் சிங் 25, ஜித்தேஷ் சர்மா 27, சாம் கரண் 23, ஷசாங்க் சிங் 21 ரன்கள் எடுத்தனர். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப் ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சாம் கரண் வீசினார். கோலி பேட்டிங் செய்தார். முதல் பந்தில் ரன் எடுக்காத போது 2ஆவது பந்தில் கோலி ஆப் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிருந்த ஜானி பேர்ஸ்டோவிடம் சென்றது. ஆனால், பேர்ஸ்டோவ் அதனை தவறவிடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. அதன் பிறகு வரிசையாக ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். கடைசியாக 5ஆவது பந்திலும் ஒரு பவுண்டரி அடிக்க மொத்தமாக 16 ரன்கள் குவித்தார்.
Virat Kohli, IPL 2024: கேட்ச் விட்டதால் வந்த வினை, ஒரே ஓவரில் 4, 4, 4, 0, 4 வெளுத்து கட்டிய கோலி!
கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 3 ரன்னிலும், கேமரூன் க்ரீன் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க, ரஜத் படிதார் 18 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் தனது வானவேடிக்கை காட்டி விளையாடிய விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 51ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 100 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த 3ஆவது வீரரானார்.
முதல் இந்திய வீரராக விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய அணிக்காக இதுவரையில் 37 சதங்கள் அடித்துள்ளார். அதோடு, உள்ளூர் போட்டிகளிலும் அரைசதங்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக மொத்தமாக 100 அரைசதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் (109) மற்றும் கிறிஸ் கெயில் (110) ஆகியோர் அதிக அரைசதங்கள் அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரோர் களத்தில் இருந்தனர். 18ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கவே, கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது.
இப்படியொரு ரோகித் சர்மாவா? தண்ணில சறுக்கி, ஆட்டம், பாட்டம் என்று ஹோலி கொண்டாடிய டான் – வைரல் வீடியோ!
ஹர்ஷல் படேல் 19ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கொடுக்கவே, கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்க, 2ஆவது பந்து வைடாக செல்ல, 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்து கொடுத்து வெற்றியும் தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆர்சிபி 19.2 ஓவரில 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் 10 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28* ரன்கள் எடுத்தார். லோம்ரோர் 17 ரன்கள் எடுத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் டெத் ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 372 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் தான்38 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த ஆர்சிபி போட்டி உள்பட இதுவரையில் நடந்த 6 போட்டிகளிலும் ஹோம் மைதானங்களில் ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. நாளை நடக்கும் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போடியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியிலும் சென்னை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 25 March 2024
- Anuj Rawat
- Arshdeep Singh
- Asianet News Tamil
- Dinesh Karthik
- Faf du Plessis
- Glenn Maxwell
- IPL 2024 Bengaluru vs Pubjab Live
- IPL 2024 asianet news
- IPL 2024 schedule
- IPL 6th match
- IPL cricket 2024 live updates
- IPL point table 2024
- Indian Premier League
- Jonny Bairstow
- Liam Livingstone
- M Chinnaswamy Stadium
- Punjab Kings
- RCB vs PBKS ipl 2024
- RCB vs PBKS live
- RCB vs PBKS live score
- Royal Challengers Bengaluru
- Royal Challengers Bengaluru vs Punjab Kings
- Royal Challengers Bengaluru vs Punjab Kings IPL 2024
- Sam Curran
- Shikhar Dhawan
- TATA IPL 2024 news
- Virat Kohli
- watch RCB vs PBKS live