IND vs AUS World Cup 2023 Final: சொந்த மண்ணில் தோல்வி – தொடர் நாயகன் விருது வென்று ஆறுதல் கொடுத்த விராட் கோலி!

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 765 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு தொடர் நாயகனுக்கான விருதை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வழங்கினார்.

Virat Kohli received his Player of the Tournament medal from BCCI President Roger Binny for 765 runs in CWC 2023 rsk

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

விராட் கோலியை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அனுஷா சர்மா!

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஹோம் டீம் தான் டிராபியை கைப்பற்றும் என்ற டிரெண்டை உடைத்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்!

மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இதற்கு முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 8 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

ஒத்தை ஆளாக இந்தியாவை சுருட்டிய ஹெட் - 6ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடர் நாயகனுக்கான விருது வழங்கினார். இதில் வின்னிங் டீம் பவுலரான ஆடம் ஜம்பா 23 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனுக்கான விருது பட்டியலில் இருந்தனர். எனினும், அதிக ரன்கள் குவித்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய பிரதர் நரேந்திர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் உலகக் கோப்பை டிராபியை வழங்கினர்.

IND vs AUS World Cup 2023 Final: குருவி சேர்ப்பது போன்று ஒன்னு ஒன்னாக சேர்த்த இந்தியா 240 ரன்னுக்கு ஆல் அவுட்!

உலகக் கோப்பை 2023 சுருக்கம்:

அதிக ரன்கள் – விராட் கோலி (765)

தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் – கிளென் மேக்ஸ்வெல் (201 நாட் அவுட்)

அதிக சதங்கள் – குயீண்டன் டி காக் - 4

அதிக சிக்ஸர்கள் – ரோகித் சர்மா - 31

அதிக விக்கெட்டுகள் – முகமது ஷமி – 24

சிறந்த பவுலிங் – முகமது ஷமி (7/57)

அதிக விக்கெட் கீப்பர் ஆட்டமிழப்பு – குயீண்டன் டி காக் (20)

அதிக அவுட்பீல்டு கேட்ச் – டேரில் மிட்செல் - 11

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios