ஹோம் டீம் தான் டிராபியை கைப்பற்றும் என்ற டிரெண்டை உடைத்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்!
இந்தியா நடத்திய 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா தான் கைப்பற்றும் என்று டிரெண்டை உடைத்து ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் நடந்த 13ஆவது உலகக் கோப்பை 2023
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி
இதில், முதல் 2 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து அக்டோபர் 15 ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தது. அதன் பிறகு விளையாடிய 7 லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு 3ஆவது அணியாக முன்னேறியது.
ஒத்தை ஆளாக இந்தியாவை சுருட்டிய ஹெட் - 6ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா
இதையடுத்து நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் 2ஆவது முறையாக மோதின. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை போன்று 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. India vs Australia World Cup 2023 Final:2011க்கு பிறகு 11-50 ஓவர்களில் இந்தியா 4 பவுண்டரி அடித்து மோசமான சாதனை!
ஆஸ்திரேலியா
இதில், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 7, மிட்செல் மார்ஷ் 15 மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கண்கலங்கிய இந்திய வீரர்கள்
இதே போன்று லபுஷேன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஹெட் 137 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
ரோகித் சர்மா
தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.
ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்
இந்த நிலையில், தான் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை என்பதால், இந்தியா தான் டிராபியை கைப்பற்றும் என்ற பிம்பம் இருந்தது. ஆனால், அதனை உடைத்து இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சாம்பியனாகி அந்த டிரெண்டை உடைத்தெறிந்துள்ளது.
டிராவிஸ் ஹெட் சதம்
இதற்கு முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் வங்கதேசம் நடத்தின. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி டிராபியை கைப்பற்றியது.
டீம் இந்தியா
இதன் காரணமாக இந்தியா நடத்திய இந்த 2023 உலகக் கோப்பை தொடரை இந்தியா தான் கைப்பற்றும் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். அதற்காக பிரார்த்தனையும், வழிபாடும் செய்தனர். எனினும், ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.