கைவிரித்த கோலி, ஜடேஜா: வெற்றிக்கு போராடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

Virat Kohli out for 49 runs and India fight against Australia to win in WTC Final 2023

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா தான் டாஸ் வென்றது. அப்படியிருந்தும் பந்து வீச்சு தீர்மானிந்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் ஆடி 469 ரன்கள் குவித்தது.

Asia Cup 2023: பாகிஸ்தானில் 4, இலங்கையில் 9 போட்டிகள் நடத்தப்படும் - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!

இதையடுத்து இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி 296 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து 443 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதில், இந்தியாவிற்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000, 5000 ரன்கள் அடித்த விராட் கோலி!

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில், சுப்மன் கில் சர்ச்சையான முறையில் ஸ்காட் போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா 43 ரன்னிலும், புஜாரா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே மட்டுமே களத்தில் இருந்தனர். இதையடுத்து 5ஆவது நாளை தொடங்கிய விராட் கோலி 49 ரன்களில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

சுப்மன் கில் அவுட்டா? நாட் அவுட்டா? டிவி அம்பயரை கலாய்த்து தள்ளிய மீம்ஸ்!

கோலி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஜடேஜாவும் 2 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜடேஜாவைத் தொடர்ந்து களமிறங்கிய பரத், ரஹானேவுடன் இணைந்து போராடி வருகிறார்.

சுப்மன் கில் விக்கெட்டிற்கு ஏன் சாப்ட் சிக்னல் முறை இல்லை? எம்சிசி கிரிக்கெட் சட்டம் 33.3 என்ன சொல்கிறது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios