சுப்மன் கில் விக்கெட்டிற்கு ஏன் சாப்ட் சிக்னல் முறை இல்லை? எம்சிசி கிரிக்கெட் சட்டம் 33.3 என்ன சொகிறது?
ஐசிசி புதிய விதிமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அப்படியிருந்தும் சாப்ட் சிக்னல் முறையில் நடுவருக்கு சந்தேகம் இருந்தும் அவர் அவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா தான் டாஸ் வென்றது. அப்படியிருந்தும் பந்து வீச்சு தீர்மானிந்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் ஆடி 469 ரன்கள் குவித்தது.
இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!
இதையடுத்து இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி 296 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து 443 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதில், இந்தியாவிற்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுப்மன் கில் அவுட்டா? நாட் அவுட்டா? டிவி அம்பயரை கலாய்த்து தள்ளிய மீம்ஸ்!
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில், சுப்மன் கில் சர்ச்சையான முறையில் ஸ்காட் போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், சுப்மன் கில் விக்கெட்டிற்கு ஐசிசி புதிய விதிமுறையின்படி சாப்ட் சிக்னல் முறை ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கேட்ச் அல்லது ரன் அவுட்டிற்கு ஆகியவற்றிற்கு கள நடுவர் அவுட் கொடுத்த பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் சாப்ட் சிக்னல் முறை மூலமாக மூன்றாவது நடுவரை நாடுவார்.
கண்ணை மூடிக் கொண்ட நடுவர்; சந்தேகம் என்றால் நாட் அவுட் தான் – விரேந்திர சேவாக் விமர்சனம்!
அப்படி மூன்றாவது நடுவருக்கும் அது சந்தேகமாக இருந்தால் கள நடுவர் என்ன கொடுத்தாரோ அதையே இறுதி தீர்ப்பாக அறிவிக்கப்படும் என்று இருந்தது. ஆனால், இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டு கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, கேட்ச் அல்லது ரன் அவுட்டிற்கு சந்தேகம் இருந்த நிலையில் கள நடுவர் அவுட் கொடுக்க தேவையில்லை. அவர் நேரடியாக மூன்றாவது நடுவரை நாடலாம்.
ஆனால், சுப்மன் கில் விக்கெட்டில், எம்சிசி கிரிக்கெட் சட்டம் 33.3ன் படி, முதலில் பந்து எங்கு விழுகிறது, அதாவது தரையிலா அல்லது கையிலா என்பதை பொறுத்தும், பந்து மற்றும் பீல்டரின் இயக்கம் முற்றிலும் முடிவடைவதை வைத்தும் தான் கேட்ச் விக்கெட் தீர்மானிக்கப்படுவதாக சட்டம் சொல்கிறது. இந்த முறையில் தான் சுப்மன் கில்லிற்கு விக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி, ரஹானேவை நம்பியிருக்கும் இந்தியா – 4ஆம் நாள் முடிவில் 164 ரன்கள் குவிப்பு!