கண்ணை மூடிக் கொண்ட நடுவர்; சந்தேகம் என்றால் நாட் அவுட் தான் – விரேந்திர சேவாக் விமர்சனம்!
எப்போது ஒரு கேட்சிற்கு மூன்றாவது நடுவருக்கு சந்தேகம் என்று வருகிறதோ, அப்போது நாட் அவுட் தான் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.
விராட் கோலி, ரஹானேவை நம்பியிருக்கும் இந்தியா – 4ஆம் நாள் முடிவில் 164 ரன்கள் குவிப்பு!
இதன் மூலமாக 444 ரன்கள் வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஸ்காட் போலண்ட் ஓவரில் சுப்மன் கில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தரையோடு அள்ளி ஏமாத்திய க்ரீன்: சுப்மன் கில்லிற்காக நடுவரிடம் வாக்குவாதம் செய்த ரோகித் சர்மா!
கொஞ்ச நேரம் அந்த கேட்ச்சை மூன்றாம் நடுவர்கள் டிவி ரீப்ளேயில் சரிபார்த்தனர். எனினும், கள நடுவர் அவுட் கொடுத்ததன் மூலமாக அவர்களும் அவுட் கொடுத்தனர். ஆனால், எப்படி அவுட் கொடுக்க போச்சு என்று கேப்டன் ரோகித் சர்மா கள நடுவரிடம் விவாதம் செய்தார். மேலும், சைகை மூலமாகவும் கேட்ச் பிடித்தது குறித்தும் முறையிட்டார்.
ஆனால், கடைசியாக சுப்மன் கில் வெளியேறும் நிலைதான் வந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோளோடு வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் ஆட்டமிழந்தது ரோகித் சர்மாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. கிரிக்கெட் ரசிகர்களும் கேமரூன் க்ரீனை விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் பந்து வீச வரும் போதும் கூட ரசிகர்கள் சீட்டிங் சீட்டிங் என்று கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபனராக 13,000 ரன்களை கடந்த 3ஆவது வீரரான ரோகித் சர்மா!
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுப்மன் கில்லிற்கு முடிவு எடுக்கும் போது மூன்றாவது நடுவர் கண்ணைக் கட்டிக் கொண்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார். மேலும், உறுதியில்லை, சந்தேகம் இருந்தால் அது நாட் அவுட் தான் என்று கூறியுள்ளார்.