Asianet News TamilAsianet News Tamil

India vs Pakistan, Virat Kohli: இது கோலியோட கோட்டை; சதமும் அடிச்சு, 13,000 ரன்களையும் கடந்து சாதனை படைத்த கிங்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தனது 47ஆவது சதத்தை பூர்த்தி செய்ததோடு மட்டுமின்றி ஒரு நாள் போட்டிகளில் 13000 ரன்களையும் கடந்து சாதனை படைத்துள்ளார்.

Virat Kohli Hit his 47th ODI Century in Super 4 India vs Pakistan Asia Cup 2023 at Colombo rsk
Author
First Published Sep 11, 2023, 7:04 PM IST | Last Updated Sep 11, 2023, 7:04 PM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி களமிறங்கினார். அதன் பின்னர் சுப்மன் கில் 58 ரன்களில் ஆட்டமிழக்க 4ஆவது வரிசையில் கேஎல் ராகுல் களமிறங்கினார்.

திரும்ப வந்துட்டேனு சொல்லு, ஃபிட்டா தான் இருக்கேனு சொல்லி 100 பந்துகளில் 100 அடித்து அசத்திய கேஎல் ராகுல்!

ஒரு கட்டத்தில் இந்திய அணி 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டியானது ரிசர்வ் டே மூலம் இன்று நடந்தது. இன்றும் மழை பெய்த நிலையில் போட்டியானது தாமதமாக தொடங்கப்பட்டது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். விக்கெட்டை மட்டுமே இழக்கவே கூடாது என்று இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த கேஎல் ராகுல்!

கேஎல் ராகுல் மட்டும் அடிக்கடி பவுண்டரி விளாசினார். ஒரு கட்டத்தில் ராகுல் தனது 14 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று கோலியும் தனது 66ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை நிறைவு செய்தார். 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரியும், 2 சிக்ஸரும் விளாசினார். பின்னர், விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த போது 2 ரன்கள் எடுத்து சர்வதேச போட்டியில் 13000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.

India vs Pakistan Super Fours, Haris Rauf: ஹரிஷ் ராஃப் காயம்; எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க சென்றதாக அறிவிப்பு!

இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில் 13000 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், விராட் கோலி 267 இன்னிங்ஸில் 13000 ரன்களை கடந்துள்ளார். ரிக்கி பாண்டிங்கும் 341 இன்னிங்ஸில் 13000 ரன்கள் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஒரு நாள் போட்டியில் 47ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று கேஎல் ராகுலும் 106 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக முதல் லீக் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான பாகிஸ்தான் 342 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Asia Cup India vs Pakistan: மழை இல்லை; ஓவர்கள் குறைக்கப்பட்டதா? போட்டி 4.40 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios