India vs Pakistan Super Fours, Haris Rauf: ஹரிஷ் ராஃப் காயம்; எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க சென்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ராஃப் காயம் காரணமாக இன்றைய போட்டியில் பந்து வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan Player Haris Rauf will not be bowling today as a precautionary measure and will go to take MRI Scan rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் முதலில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 58 ரன்களில் வெளியேறினர்.

Asia Cup India vs Pakistan: மழை இல்லை; ஓவர்கள் குறைக்கப்பட்டதா? போட்டி 4.40 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

அடுத்து அந்த விராட் கோலி 8 ரன்னிலும், கேஎல் ராகுல் 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மேலும், மழை நின்ற பிறகு போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்ககபட்ட நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. மேலும், ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது.

Asia Cup 2023 IND vs PAK Super Fours: இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மழை; புதிய சிக்கலில் டீம் இந்தியா!

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இன்றும் மழை பெய்த நிலையில் மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மழை நின்ற நிலையில், போட்டி தொடங்கப்பட உள்ளது. எனினும், ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் ஒரு ஓவர் கூட குறைக்கப்படவில்லை. 50 ஓவர்கள் முழுவதுமாக வீசப்பட உள்ளது. மேலும், போட்டியானது மாலை 4.40 மணிக்கு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

IND vs PAK: அங்கு என்ன தெரிகிறது? வடிவேலு பட ஸ்டைலில் வானத்தில் எதையோ தேடும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ராஃப் இன்றைய போட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்து வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ் வயிறு மற்றும் வலது பக்கவாட்டு பகுதியில் லேசான வலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் முன்னெச்சரிக்கையாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார் என்றும், ஆதலால், அவர் பந்து வீசமாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், அவர் விளையாடிய 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் அனில் கும்ப்ளே – வைரலாகும் புகைப்படம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios