வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட ஸ்டைலில் வானத்தில் எதையோ தேடும் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியானது முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.
அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் அனில் கும்ப்ளே – வைரலாகும் புகைப்படம்!
அதன் பிறகு சுப்மன் கில் 58 ரன்களில் ஆட்டமிழக்க கேஎல் ராகுல் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது கன மழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழை அதன் பிறகு நின்றது. இதையடுத்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
BHA vs PAK: ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!
இதன் காரணமாக ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது தொடங்க உள்ளது. இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட பாணியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அங்கு என்ன தெரிகிறது என்பது போன்று வானத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியில் கேஎல் ராகுல் 17 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
