இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக முதல் போட்டியில் கோலி ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடக்கிறது.
டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்று முதல் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் சீனியர் வீரர் விராட் கோலி ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் தொடர்ச்சியாக சொதப்பிவரும் சீனியர் வீரர் விராட் கோலி, ஒருநாள் தொடரிலாவது நன்றாக ஆடுவாரா என்று ரசிகர்களும் இந்திய அணி நிர்வாகமும் எதிர்நோக்கி காத்திருந்தது.
இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்
இந்நிலையில், அவருக்கு இடுப்பு பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முதல் ஒருநாள் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. காயம் சிறிது என்பதால் வரும் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடக்கும் அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் கோலி ஆடுவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க - கோலி ஃபார்மில் தான் இருக்கார்.. ஆனால் லக் இல்ல..! ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் வீரர்
இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் கோலி ஆடவில்லை என்றால், ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறுவார். கோலி ஆடினால் ஷ்ரேயாஸுக்கு இடம் கிடைக்காது.
