Asianet News TamilAsianet News Tamil

நியூ இயர் பார்ட்டியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

துபாய் சென்றுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா அங்கு நியூ இயர் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Virat Kohli enjoying new year 2023 party with his wife Anushka Sharma
Author
First Published Jan 1, 2023, 2:26 PM IST

வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விராட் கோலி விளையாடினார். முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் சரியாக ஆடாத விராட் கோலி 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடி 113 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 45 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

எனது பதவிக்காலம் முடிவதற்குள் பாகிஸ்தானில் 2 அணிகள் உருவாக்குவதே எனது நோக்கம்: ஷாகீத் அப்ரிடி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

பின்ச் அதிரடி வீண்: 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பெர்த் அணி!

வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் நடக்கிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தனது குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வருகிறார். குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நியூ இயர் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுஷ்கா சர்மா கருப்பு நிற உடையிலும், விராட் கோலி வெள்ளை நிற டீசர்ட்டும் அணிந்து நியூ இயர் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு வாமிகா கோலி என்று ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios