முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மருத்துவமனையில் அனுமதி

Vinod Kambli Hospitalised: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Vinod Kambli admitted to Thane hospital in critical condition sgb

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீப காலமாகவே அவர் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள ரமாகாந்த் அச்ரேக்கரின் சிலை திறப்பு விழாதான் சமீபத்தில் காம்ளி கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி.

காம்ளி தானேவின் அக்ரிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 52 வயதான காம்ளியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால், இருப்பினும் அவருக்கு இருக்கும் நோய் பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை" என ஐஏஎன்எஸ் கூறுகிறது.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர்களில் காம்ளியும் ஒருவர். கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் அவரது சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்தே மாதம் 20,000 க்கு மேல் சம்பாதிக்கலாம்! சூப்பர் ஹிட் திட்டம் இதோ!

ஒரு மாதத்திற்கு முன்பு, காம்ளி சிறுநீர் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரே விக்கி லால்வானியின் யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். குடும்பத்தினர் தனக்கு உதவியாக இருப்பதையும் விளக்கினார். காம்ளி  தனக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுவது பற்றியும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

2013ஆம் ஆண்டில் காம்ளி இரண்டு இதய அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். அதற்கு சச்சின் டெண்டுல்கரின் நிதியுதவி செய்ததையும் காம்ளி தெரிவித்துள்ளார்.

காம்ப்ளியின் 9 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். இந்தியாவுக்காக 17 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டிகளில் ஆடினார். 2 இரட்டை சதங்கள் உட்பட நான்கு டெஸ்ட் சதங்களை அடித்தார். டெஸ்டில் தொடர்ச்சியாக இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் காம்ளிதான்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios