கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. உள்நாட்டு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸில் வின்சி டி10 லீக் தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க நாளிலேயே 3 போட்டிகள் நடந்தன. பெரிய வீரர்கள் யாரும் ஆடவில்லையென்றாலும், 2 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. 

கொஞ்சம் கொஞ்சமாக வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது. நேற்று நடந்த மூன்று போட்டிகளில், கிரெனெடைன் டைவர்ஸ் அணியை வீழ்த்தி சால்ட் பாண்ட் பிரேக்கர்ஸ் அணியும், எஃப்சிஎஸ் அணியை வீழ்த்தி டார்க் வியூ எஸ்ப்ளோரர்ஸ் அணியும், பிஜிஆர் அணியை வீழ்த்தி ஹைக்கர்ஸ் அணியும் வெற்றி பெற்றன.