விராட் கோலி கேப்டன்ஷியில் இந்தியா 31 டெஸ்டில் 2 தோல்வி; ரோகித் கேப்டன்ஷியில் 9ல் 3 தோல்வி!

விராட் கோலி கேப்டனாக இருந்த போது 7 ஆண்டுகளில் இந்தியா விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில் 2ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

Under Virat Kohli's captaincy, India lost 2 of 31 Tests; 3 defeats out of 9 in Rohit's captaincy rsk

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோரது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கால் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி பலம் வாய்ந்த அணியாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் எடுத்திருந்த போதிலும் கூட 2ஆவது இன்னிங்ஸில் வெற்றி இலக்காக கொண்ட 231 ரன்களை எடுக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணி விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 2-1 (4) என்று தொடரை கைப்பற்றியது. இந்த தோல்வியைத் தொடர்ந்து தற்போது 2ஆவது முறையாக தோல்வியை தழுவியது. ஒரே வருடத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

ஆனால், விராட் கோலி கேப்டனாக இருந்த போது கடந்த 2014 – 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில் 2ல் மட்டுமே தோல்வியை தழுவியது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 7 ஆண்டுகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவிய நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான டீம் இந்தியா தற்போது ஒரே ஆண்டில் 3ல் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios