Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலிக்கு அவுட் தர மறுத்த நடுவர்: டிஆர்எஸ்க்கு சென்ற தென் ஆப்பிரிக்கா அப்புறம் என்ன நடந்தது?

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 37ஆவது லீக் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு கள நடுவர் அவுட் தர மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாக கள நடுவர் செயல்பட்டதாக சமுக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.

Umpire who refused to give out to Virat Kohli and South Africa went to DRS rsk
Author
First Published Nov 5, 2023, 5:31 PM IST | Last Updated Nov 5, 2023, 5:31 PM IST

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 35ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருவரும் அதிரடியாக விளையாடினார்.

IND vs SA: இந்தியாவில் ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் வேறு, நீங்கள் அடிக்க வேண்டாம், நாங்களே தருகிறோம் என்று எக்ஸ்டிராவாக வைடு+பவுண்டரி கொடுத்தனர். இந்திய அணியின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ரோகித் சர்மா 24 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 24 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எப்படியாவது சதம் அடிக்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடி வருகிறார்.

பிறந்தநாளில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கிங் கோலி!

இந்த நிலையில் போட்டியின் 20.1ஆவது ஓவரில் கேசவ் மகாராஜ் வீசிய பந்து அடிக்க முயற்சித்த போது அது கேட்ச் ஆனது. இதற்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவுட் கேட்க நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதனை அடுத்து கேசவ் மகாராஜ் டிஆர்எஸ் கேட்கும்படி கேப்டனை வலியுறுத்தினார். அதன்படி டிஆர்எஸூம் எடுக்கப்பட்டது.

முடி வெட்டிக் கொண்டே நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியை பார்த்த விராட் கோலி!

டிவி ரிப்ளேவில் பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டதா என பார்க்கப்பட்டது. அப்போது பந்து பேட்டில் படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் பேட் காலில் பட்டது. ஆனால் மறுபடியும் காட்டப்பட்ட ரீப்ளேவில் ஸ்னிக்கோ மீட்டரில் எதுவுமே படவில்லை என்பது போல் காட்டப்பட்டது. இதனை அடுத்து மூன்றாவது நடுவரும் அவுட் தர மறுத்துவிட்டார். இந்த  நிலையில் தான் சிலர் விராட் கோலிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாதி பெயரை நீக்க வேண்டும்..! பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த கார்த்தி சிதம்பரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios