சிஎஸ்கே - கேகேஆர் இடையேயான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில், முதல் ஓவரிலேயே சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை உமேஷ் யாதவ் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

ஐபிஎல் 15வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. மும்பை வான்கடேவில் நடக்கும் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியும் ஆடிவருகின்றன.

இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஜடேஜா(கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), பிராவோ, மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேகேஆர் அணி சார்பில் முதல் பந்தையே நோ பாலாக வீசிய உமேஷ் யாதவ், ஃப்ரீ ஹிட்டில் ரன்னே கொடுக்காமல் அருமையாக வீசினார். 3வது பந்திலேயே ருதுராஜை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ்.

இதையடுத்து டெவான் கான்வேவுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா அடித்து ஆடிக்கொண்டிருக்க, 8 பந்தில் 3 ரன்களுக்கு வெளியேறினார் டெவான் கான்வே. கான்வேவையும் உமேஷ் யாதவே வீழ்த்தினார். 28 ரன்களுக்கு சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.