Asianet News TamilAsianet News Tamil

Rishabh Pant: ரிஷப் பண்ட் பொய் சொல்றாரு.. வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்த ரசிகர்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியின் முக்கியமான தருணத்தில் ரிவியூ எடுக்கத் தவறிய டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், மற்ற வீரர்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டுகிறார் என்று வீடியோ ஆதாரத்துடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துவருகின்றனர்.
 

twitter user slams dc captain rishabh pant for wrongly blame his teammates
Author
Mumbai, First Published May 22, 2022, 8:42 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது டெல்லி கேபிடள்ஸ் அணி. 

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.

160 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி நேர டிம் டேவிட்டின் காட்டடியால் வெற்றி பெற்றது. டிம் டேவிட் 11 பந்தில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.

அவர் களமிறங்கும்போது மும்பை அணிக்கு 33 பந்தில் 65 ரன்கள் தேவைப்பட்டது. 15வது ஓவரின் 4வது பந்தில் களத்திற்கு வந்தார் டிம் டேவிட். அவர் எதிர்கொண்ட முதல்பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டிய அவருக்கு, ஆடும் வாய்ப்பை அளித்தது டெல்லி அணி தான். 15வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், அந்த ஓவரின் 3வது பந்தில் பிரெவிஸை வீழ்த்த, 4வது பந்தில் டிம் டேவிட் களத்திற்கு வந்தார். அந்த பந்தில் விக்கெட் கீப்பிங் கேட்ச்சில் அவர் அவுட். அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அவுட்டுக்கு அப்பீல் செய்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், அதை ரிவியூ செய்யவில்லை. 

ஆனால் ரீப்ளேவில் அல்ட்ராஎட்ஜில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. அப்பீல் செய்த ரிஷப் பண்ட் ரிவியூ செய்திருந்தால் டிம் டேவிட் முதல் பந்திலேயே நடையை கட்டியிருப்பார். 5 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், மும்பை அணியின் கடைசி பேட்ஸ்மேனான, அதுவும் அதிரடி பேட்ஸ்மேனான டிம் டேவிட்டிற்கு ரிவியூ செய்யாமல் வைத்திருந்தது அந்த ரிவியூ பிரயோஜமேயில்லை. அப்படியிருக்கையில், அவரை வீழ்த்திவிட்டால் கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்ற நிலையில், அவருக்கு ரிஷப் பண்ட் ரிவியூ எடுக்காதது மோசமான கேப்டன்சி. 

ரிஷப் பண்ட்டின் அந்தவொரு தவறான முடிவு, போட்டியின் முடிவையே மாற்றியதுடன், டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கவும் காரணமாக அமைந்தது. இதையடுத்து ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய ரிஷப் பண்ட், அணி வீரர்கள் ரிவியூ எடுக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார். ஆனால் அவர் கூறியது உண்மையில்லை. ரிஷப் பண்ட்டிடம் ரிவியூ எடுக்குமாறு சர்ஃபராஸ் கான் எவ்வளவோ வலியுறுத்தினார். ஆனால் அவரது கருத்துக்கு ரிஷப் செவிமடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அவரது தவறை ஏற்றுக்கொள்ளாமல், சக வீரர்கள் மீது பழிபோட்டார் ரிஷப் பண்ட். 

அதனால் அதிருப்தியடைந்த ரசிகர் ஒருவர், சர்ஃபராஸ் கான் ரிவியூ எடுக்க வலியுறுத்திய வீடியோவை பகிர்ந்து ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios