CSK: சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டிக்கு கவுண்டர் டிக்கெட் கிடையாது – ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை!

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகளுக்கு கவுண்டர் டிக்கெட் கிடையாது என்றும் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

tickets for CSK matches in Chennai Chepauk will be sold online only rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இன்னும் 11 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், பாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது சென்னையின் கோட்டை என்று அழைக்கப்படும் சேப்பாக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.

இதற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தவிர பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ ஆகிய பகுதிகளில் சிஎஸ்கே விளையாடும் போட்டியை பார்ப்பதற்கே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அப்படியிருக்கும் போது முதல் போட்டியே சென்னை சேப்பாக்கத்தில் என்றால் சும்மா விடுவார்களா? எப்போது தோனியை பார்ப்போம், சிஎஸ்கே விளையாடும் போட்டியை பார்ப்போம் என்று ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் ஐபிஎல் சிஎஸ்கே விளையாடும் போட்டிக்கான டிக்கெட் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, சிஎஸ்கே விளையாடும் போட்டிக்கு கவுண்டர் டிக்கெட் கிடையாது என்றும், ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனைக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டரில் விற்கப்படும் டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, அந்த டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனையும் செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மட்டுமே சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios