5 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய Victory Parade 7 மணியாகியும் ஆரம்பிக்கல: கூட்ட நெரிசலில் சிக்கிய பேருந்து!

டி20 உலகக் கோப்பை Victory Parade மாலை 5 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்திய அணி வீரர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய பேருந்து ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The T20 World Cup Victory Parade was scheduled for 5 pm, but the bus carrying the Indian team players got stuck in a crowd of fans and got delayed rsk

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார்.

 

 

இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் பிறகு அவருடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர். இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் தனது மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோருடன் இணைந்து பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மோடி தனது கையில் பும்ராவின் மகன் அங்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

 

 

இதே போன்று வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் இணைந்து மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், மும்பை விமான நிலையம், மரைன் டிரைவ், வான்கடே ஸ்டேடியம் உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதிய நிலையில் இந்திய அணி வீரர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய பேருந்து கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது. இரவு 7 மணி ஆகியும் இதுவரையில் பஸ் மரைன் டிரைவ் வரவில்லை. மும்பை போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios