சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்ட போஸ்டர் வைரல்!
கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்வி அடைந்த போது பிரதமர் மோடி வெற்றி பெற்றிருபப்தாக கூறிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் பிளே ஆஃப் சுற்று போட்டிகளின் முதல் தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வி அடையும் அணி அப்படியே வெளியேறும். வெற்றி பெறும் அணி 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும். எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.
முதல் முறையாக அகமதாபாத்தில் KKR vs SRH பலப்பரீட்சை; இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது?
2ஆவது தகுதிச் சுற்று போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடியது.
இதில், வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு சென்றது. அதில், தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த ஆண்டு பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி பிரதமராக அரியணை ஏறினார். இதே போன்று 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து முதல் தகுதிச் சுற்று போட்டியில் விளையாடியது.
இதில் தோல்வி அடைந்து 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடியது. இதில், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்று ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. இந்த ஆண்டும் பாஜக வெற்றி பெற்று 2ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக அரியணை ஏறினார்.
இந்த நிலையில் தான் தற்போது ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதன் காரணமாக இந்த முறையும் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்று எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.