Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ 1st Semi Final: இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமி படைத்த சாதனைகளின் பட்டியல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

The list of Records of Mohammed Shami, the reason for the success of the Indian team against New Zealand in 1st Semi Final of World Cup 2023 rsk
Author
First Published Nov 16, 2023, 12:04 PM IST | Last Updated Nov 16, 2023, 12:04 PM IST

இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையிலான 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. பின்னர், விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

India vs New Zealand 1st Semi Final:நியூசிலாந்திற்கு எதிரான முதல் அரையிறுதி – விராட் கோலி படைத்த சாதனை துளிகள்!

இந்தப் போட்டியின் மூலமாக இந்திய அணி படைத்த சாதனைகள் குறித்து பார்க்கலாம் வாங்க….

முகமது ஷமியின் சாதனை துளிகள்:

  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்தார்.
  • உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
  • டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் என்று மொத்தமாக சிறந்த பந்து வீச்சாக அவர் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியது அமைந்துள்ளது.
  • ஒரு நாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 6/4, அனில் கும்ப்ளே 6/12, ஜஸ்ப்ரித் பும்ரா 6/19, முகமது சிராஜ் 6/21 என்பதே சிறந்த பந்து வீச்சாக இருந்துள்ளது. 2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆசிஷ் நெஹ்ரா 6/23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2ஆவது இடத்தில் மிட்செல் ஸ்டார்க் (3 முறை) இடம் பெற்றுள்ளார்.
  • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஜாகீர் கான் எடுத்த 21 விக்கெட்டுகள் என்பதே அதிகபட்சமாக இருந்துள்ளது.
  • உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை பழி வாங்க காத்திருக்கும் டீம் இந்தியா, இது நடந்தால் மட்டுமே சாத்தியம்!

The list of Records of Mohammed Shami, the reason for the success of the Indian team against New Zealand in 1st Semi Final of World Cup 2023 rsk

விராட் கோலியின் சாதனை துளிகள்:

  • விராட் கோலி 50ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார்.
  • 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மொத்தமாக 673 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை விராட் கோலி 10 போட்டிகளில் 711 ரன்கள் குவித்து முறியடித்தார்.
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே எடிசனில் 700 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
  • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக சதம் அடித்துள்ளார். அதிக முறை (8) 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
  • ஒரு நாள் போட்டிகளில் 13,700 ரன்களை கடந்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 291 ஒரு நாள் போட்டிகளில் 13,794 ரன்கள் எடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங் 375 ஒரு நாள் போட்டிகளில் 13,704 ரன்கள் எடுத்துள்ளார்.
  • நியூசிலாந்திற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 6 சதங்கள் அடித்துள்ளார். கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும் 6 சதங்கள் அடித்திருந்தார்.
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குறைந்தது 3 சதங்கள் அடித்த 9ஆவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, மார்க் வாக் (ஆஸ்திரேலியா 1996), சவுரவ் கங்குலி (இந்தியா 2003), மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா 2007), குமார் சங்கக்காரா (இலங்கை, 2015), ரோகித் சர்மா (இந்தியா, 2019), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா, 2019), குயீண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா, 2023), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து, 2023)

சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!

சண்டே பிளாஸ்டுக்காக காத்திருக்க முடியாது – சூப்பர் 7 ஷமி, யு ஆர் தி மேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டு!

The list of Records of Mohammed Shami, the reason for the success of the Indian team against New Zealand in 1st Semi Final of World Cup 2023 rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios