அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!
ஒரு ஓவர் வீசி முடிந்ததும், அடுத்த ஓவர் வீச வருவதற்கு 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஒரு நாள் கிரிக்கெட், டி20, டெஸ்ட் போட்டிகளின் போது ஏதாவது ஒன்று புதிது புதிதாக நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்து ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் டைம் அவுட் முறை சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையான முறையில் ஒருவர் ஆட்டமிழக்கும் போது கள நடுவர் அவுட் கொடுத்து, மூன்றாவது நடுவரிடம் முறையிடும் முறை இருந்தது. ஆனால், அது அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. சர்ச்சையான முறையில் ஒருவர் ஆட்டமிழக்கும் போது கள நடுவர், மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்யலாம். ஆனால், கள நடுவர் அவுட் கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இப்படி புதிய புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடந்த வாரியக் கூட்டத்தின் போது இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பந்து வீச்சாளர் ஒரு ஓவரை வீசி முடித்த பிறகு அடுத்த ஓவரை வீச வருவதற்கு 60 வினாடிகள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அதாவது, ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் 3 முறை தாமதமானால் எதிரணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.
இந்த விதிமுறையானது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் சோதனை முறையில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
யார் இந்த தாஜி? ரோகித் சர்மாவிற்கும், மனைவி ரித்திகாவிற்கும் தியானம் கற்றுக் கொடுத்த ஆன்மீக குரு!