ஹெலிகாப்டரில் பறந்து வந்த டி20 உலகக் கோப்பை ஜெர்சி – காலரில் காவி, வெள்ளை, பச்சை, 10 மணி முதல் விற்பனையில்…!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பறந்து வந்த ஜெர்சியின் காலரில் காவி, வெள்ளை மற்றும் பச்சை என்று மூவர்ணமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Team Indias T20 World Cup 2024 New Jersey unveiled in Dharamsala, Rohit Sharma, Ravindra Jadeja and Kuldeep Yadav are in Launch Video rsk

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by adidas India (@adidasindia)

 

மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக பறந்து வந்த ஜெர்சியில் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை என்று மூவர்ணமும் காலரில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை ஜெர்சியில் நீல நிறம் தான் அதிகளவில் இருந்தது. காவி மற்றும் பச்சை மிக குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது 2024 ஆம் ஆண்டுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட டி20 ஜெர்சியில் காவி நிறம் அதிகமாக இருக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி இன்று 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios