தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் ஆடுகின்றன. 

முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு தரம்சாலாவில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் இறங்குவார்கள். அதற்கடுத்து கேப்டன் கோலி இறங்குவார். கோலிக்கு அடுத்து ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறங்குவார்கள். 

இந்திய அணி நல்ல பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டுதான் குல்தீப், சாஹலை நீக்கியுள்ளது. எனவே ஸ்பின் பவுலர்களை பொறுத்தமட்டில் ஆல்ரவுண்டர்கள் தான் இருப்பார்கள். ஹர்திக் பாண்டியா ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர். அவரை தவிர மூன்று ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள். ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவருமே ஸ்பின் ஆல்ரவுண்டர்கள். இவர்கள் மூவரும் அணியில் இருப்பார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹரும் நவ்தீப் சைனியில் இறங்குவார்கள். இவர்களில் தீபக் சாஹரும் பேட்டிங் ஆடக்கூடியவர். எனவே நம்பர் 10 வரை இந்திய அணியில் பேட்டிங் ஆடக்கூடியவர்களாக இருப்பார்கள். 

உத்தேச இந்திய அணி;

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.