இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரில் ஆடும் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். மனீஷ் பாண்டே டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் ஆடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னர் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தபோதும், மனீஷ் பாண்டே ஆடியதைவிட ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் நன்றாகவே ஆடியுள்ளார். 

எனவே இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும். நான்காம் வரிசையில் ராகுலும் ஐந்தாம் வரிசையில் ஷ்ரேயாச் ஐயரும் இறக்கப்பட வாய்ப்புள்ளது. ஆறாம் வரிசையில் ரிஷப் பண்ட், அடுத்த வீரராக ஜடேஜாவும் இருப்பர். ஸ்பின் பவுலராக சாஹல் அணியில் இருப்பார். புவனேஷ்வர் குமார், ஷமி, நவ்தீப் சைனி ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக இறங்குவார்கள். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

1. ரோஹித் சர்மா(துணை கேப்டன்)

2. ஷிகர் தவான்

3. விராட் கோலி(கேப்டன்)

4. கேஎல் ராகுல்

5. ஷ்ரேயாஸ் ஐயர்

6. ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)

7. ரவீந்திர ஜடேஜா

8. புவனேஷ்வர் குமார்

9. ஷமி

10. சாஹல்

11. நவ்தீப் சைனி