IND vs ENG 1st Test: ஹைதராபாத் செல்லும் இந்திய வீரர்கள் – வரும் 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் ஆரம்பம்!

இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய வீரர்கள் இன்று ஹைதராபாத் செல்கின்றனர்.

Team India Will Reach Hyderabad today for the first Test Match Against England rsk

இந்தியா வரும் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் இன்று ஹைதராபாத் சென்று அங்கு பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

ரூ.2500 கோடி: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக 2028 ஆம் ஆண்டு வரையில் தொடரும் ரத்தன் டாடாவின் டாடா நிறுவனம்!

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த ஆண்டை வெற்றியோடு தொடங்கியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த ஆண்டை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

தொட்டுடேன்ல….ஓடிச் சென்று எல்லை கோட்டை தொட்டு கபடி விளையாடிய ரிஸ்வான் – நக்கல் பண்ண ஷிகர் தவான்!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.

ஜப்பானிடம் தோல்வி; பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்தியா!

 

இங்கிலாந்து:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்ஸன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), சோயில் பஷீர், ஹாரி ப்ரூக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோகஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஜோ ரூட், மார்க் வுட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios